Daily Archive: May 7, 2019

விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்

  பொன்பரப்பியில் நிகழ்ந்த தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகச் சென்னையில் நிகழ்ந்த கண்டனக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். அதையொட்டி வசைகள், ஏளனங்கள். பொதுவாக இணையத்தின் உளச்சிக்கல்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்கள் ஒரு தனியுலகில் வாழ்கிறார்கள். அன்றாடவாழ்க்கையின் சரிவுகள் தோல்விகளை இணையத்தில் கொட்டும் உச்சமான கசப்பு காழ்ப்புகளைக் கொண்டு நிகர்செய்யும் எளிய மனிதர்கள்.   ஆனால் நண்பர்கள் சிலர் சில வினாக்களை எழுப்பியிருந்தனர். நான் இவற்றை ‘முன்வைத்து’ விவாதிக்க இந்த தளத்தைப் பயன்படுத்தப்போவதில்லை. என் தரப்பை மட்டும் இங்கே …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121451

காலையில் துயில்பவனின் கடிதம்

காலையில் துயில்பவன் அன்புள்ள ஜெயமோகனுக்கு, என்னுடைய கடிதத்தை வெளியிட்டதற்க்கு மிக்க நன்றி. அயன் ராண்டின் மேல் எனக்கு ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமையை உங்களுக்கு எழுதுவதற்காக முயன்று கொண்டிருந்தேன். நீங்கள் எழுதிய அயன் ராண்ட் கட்டுரைகளை ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருந்தேன். அதை முடிப்பதற்குள் இதை உங்களுக்கு அனுப்பி விடுகிறேன். நண்பர் சுவேக்கின் பதிலுக்கும் வழிகாட்டுதலுக்கும் மிகவும் நன்றி. இதை(GENETICS) பற்றிய பேச்சு எனக்கும் அப்பாவுக்கும் முன்னரே எழுந்தது. எனக்கு தூக்கம் இவ்வாறாக தினமும் மாறுவதற்கு மரபணு தான் காரணம் என்று என் …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121291

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

Permanent link to this article: https://beta.jeyamohan.in/7855

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28

துச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரைத் திருப்புக… மூத்தவரிடம் செல்க!” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு கௌரவப் படையை தாக்கிக்கொண்டிருந்தார்கள். கௌரவப் படை உளமழிந்து பல துண்டுகளாக சிதறி அவர்களின் அம்புகள் முன் எளிய விலங்குகள் என விழுந்து உயிர்துறந்தது. மேலிருந்து கட்டிய கயிறு அறுந்து ஓவியத்திரைச்சீலை விழுந்து சுருள்வதுபோல ஒரு படைப்பிரிவே அவர்களின் அம்புகளால் விழிமுன் இருந்து மறைவதை …

மேலும் »

Permanent link to this article: https://beta.jeyamohan.in/121517