கிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்

வில்லியம் மில்லர் விக்கி 

அன்புள்ள ஜெ

கிறித்தவர்கள் மீதான தாக்குதலைப்பற்றிய உங்கள் கடிதம் கண்டேன். ஒரு சராசரி இந்துவின் அடிபப்டையான உணர்ச்சியை அழுத்தமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள். இதைவிடக் கச்சிதமாக எழுதிவிட முடியாது. இன்று இஸ்லாமியர்களில் உள்ள நடுநிலையானவர்கள் அந்த மதத்தில் உள்ள தீவிரவாத சிறுபான்மையினருக்கு அஞ்சி வாய்பொத்தி வாழ்கிறார்கள். பர்தா போடமாட்டேன் என்று சொன்ன குற்றத்துக்காக பெண்கள் தாக்கப்பட்ட பலச் அம்பவங்கள் எனக்கு தெரியும். உங்கள் கட்டுரையில் இந்த பகுதிதான் எனக்கு மிக சரியாக தோன்றியது. நாளை இந்த அடிதடிக்கும்பல்கள் இந்து சமூகத்தை தங்கள் பிடிக்குள் கொன்டுவரும். இந்த கும்பலின் கட்டளைப்படி நம் தர்மங்களும் மரபுகளிம்  திரிக்கப்படும். நெறி அறிந்தவர்கள் அஞ்சி வாய்பொத்தி நிற்பார்கள். இந்து மதத்தில் விரிவான ஞானத்டெகெடல் களம் இவர்களால் சிதைக்கப்படும். நாம் விழித்துக்கொண்டு கண்டிக்க வேண்டிய காலம் இது. இன்றைய பெரிய அபாயம் கிறிஸ்தவர்களோ முஸ்லீம் தீவிரவாதமோ அல்ல. இந்துமதக் காவலர்களாக வந்துள்ள இந்த தெருப்பொறுக்கிக் கும்பலே.

ஆர். அனந்தராமன்
திருவனந்தபுரம்
[தமிழாக்கம்]

அன்புள்ள ஜெ

ஒரிஸா வன்முறைகளைப்பற்றி நீங்கள் எழுதியதை வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் ஏன் இந்துக்கள் மேல் கிறிஸ்தவர்கள் நடத்திய தாக்குதல்களைப்பற்றி எழுதவில்லை?

கெச்.

அன்புள்ள…

ஒரிஸா விஷயத்தில் கிறிஸ்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.  லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கிறிஸ்தவர்கள் செய்தார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. அதை மாவோயிஸ்டுகள் செய்தார்கள் என்பதை அவர்களே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அங்கே நடப்பது மதக்கலவரம் அல்ல, மதத் தாக்குதல் மட்டுமே

அதேசமயம் தாங்கள் பெரும்பான்மையினராக உள்ள மேகாலயா மிசோரம் மாநிலங்களில் கிறித்தவர்கள் இந்து சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அது இந்த வன்முறையை எவ்வகையிலும் நியாயப்படுத்தாது. அந்த நியாயப்படுத்தலே ஆபாசமானது
ஜெ

அன்புள்ள ஜெ,

ஒரிஸா வன்முறைகளைப் பற்றி உங்கள் நேர்மையான கண்டனத்தைப் படித்தேன்.  இந்துக்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் குண்டர்களின் இந்த சேயல்பற்றிக் கேட்டபோது நான் வெக்டம் என்று கூவி விட்டேன். ஒரு இந்துவாக நாம் வெட்கி கூனிப்போக வேண்டிய தருணம் அது. முன்பு தொலைகாட்சியில்  பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நான் கண்ணீர் விட்டேன்.  என் இஸ்லாமிய நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டேன்.  இந்துமதம் என்பது ஒரு அமைப்பு அல்ல அது ஒரு சிந்தனைமுறை. ஒரு ஞானமார்க்கம்.  எல்ல்லா சிந்தனைகளையும் ஏற்றுக்கொன்டு அவற்றை பரிசீலித்து அவற்றுடன் சேர்ந்து வளரும் மார்க்கம் இது. எவரும் அதன் உரிமையாலர்களாக தங்களை உரிமை கொன்டாடமுடியாது.  கண்டிப்பாக இந்த குன்டர்கள் அப்படி கூறிக்கொள்ள முடியாது

கடைச்யில் வன்முறை வன்முறையையே உருவாக்கும்.  அழிவு மேலும் அழிவையே உருவாக்கும். நாங்கள் வன்முறையின் கொடுமையை கால் நூற்றாண்டாக கண்டு வரும் சமூகம். வன்முறையின் விளைவை நாங்கள் அறிவோம். இந்தியாவும் மெல்லமெல்ல இவர்களால் வன்முறைச்சமூகமாக ஆக்கப்படுவது கண்டு அச்சமும் வருத்தமும் அடைகிறேன்

கலா
கொழும்பு

அன்புள்ள ஜெ

ஒரிஸா வன்முறைகளை கண்டித்து நீங்கள் எழுதிய கட்டுரை  நீங்களும் போலிமதச்சார்பு கும்பலுடன் சேர்ந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்  என்று இருப்பது வெட்க கேடானது. நீங்கள் ஒரு சீப்பான அரசியல் வாதி போன்று எழுதியிருக்கிறீர்கள். ஒரிசாவில் இந்துப்பண்பாட்டை அழிக்க கிறித்தவர்கள் நடத்திய பணபலம் மிகுந்த சதிக்கு எதிராக அங்குள்ள மக்கள் பொறுமை இழந்து போனதனால் தான் வன்முறை உருவாகியது. அதற்கும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை.  இப்படியெல்லாம் எழுதினால் உங்களை யாரும் விட்டுவிடமாட்டார்கள்.  நீங்கள் பேசாமல் போய் கம்யூனிஸ்டுக் கும்பலில் சேரலாம்

விவேகானந்தன்
சென்னை

முந்தைய கட்டுரைகிறித்தவர்கள்மீதான தாக்குதல்கள்
அடுத்த கட்டுரைபயணம் தாஜ்மகால்:கடிதங்கள்