குடி ஒருகடிதம்

அன்புள்ள ஜெ.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதைப் பற்றி சில மாதங்களுக்கு முன் ஒரு அருமையான உரை ஆற்றியிருந்தீர்கள், அது தொடர்பாக…சென்ற வாரம் ஆமி ஒய்ன்ஹவுஸ் என்ற 27 வயதான பிரபல பாப் பாடகி போதைப்பொருள் ‘ஓவர்டோஸ்’ செய்து இறந்து போனார். அது பற்றிய ஒரு பதிவில் (http://play.lifegoesstrong.com/amy-winehouse-27-club) இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருந்தன:

௧) சமீபத்திய மூளைக்கூறு ஆய்வுகளின்படி, சிறுவர்களாக இருக்கும்போதே குடிக்க/போதைப்பொருள் உபயோகிக்கத் துவங்கியவர்கள் கண்டிப்பாக அதற்கு அடிமைகளாக மாறிவிட அதிக வாய்ப்புள்ளது. இருபது வயதில் தொடங்குபவனைவிடப் பதின்மூன்று வயதில் தொடங்குபவன் போதைக்கு அடிமையாக மாறப் பத்து மடங்கு வாய்ப்பு அதிகம்.

௨) ஒரு மனிதன் போதை அடிமையாவதற்கு அவன் பரம்பரை மரபணு காரணமாக இருக்கலாம்; ஆனால் அதையும் விட முக்கியமானது அவனை ஊக்குவித்துக் குடிக்க உற்சாகமூட்டும் சூழலே.

பள்ளிப்பருவத்தில் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து,பின் கல்லூரிகளில் குடியிலும் போதையிலும் சிக்கிச் சீரழிந்துபோன பலரை அறிவேன். இப்போது தான் புரிகிறது அவர்களது அழிவு பதின்மூன்று வயதிலேயே தொடங்கிவிட்டது என்று.

மது.

அன்புள்ள மது,

உண்மை, குடிக்குச் சாதகமான கருத்துக்கள் சூழல் ஆகியவை குடியை நோயாக ஆக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன

சில வ்ருடங்களுக்கு முன்னால் குடியைக் ‘கொண்டாடும்’ அசட்டுப் பின் நவீனத்துவர் [?] நம்மிடையே இருந்தார்கள். ஐரோப்பிய லேபில் ஒட்டிய எதற்கும் வாய்திறக்கும் நம் மனநிலைக்குச் சிறந்த உதாரணம் அவர்களே. தலித்துக்கள் குடிக்கவேண்டும் என்ற பிற்படுத்தப்பட்டோரின் சிபாரிசு அது.

என்னிடம் ஒரு தலித் நண்பர் அதைப்பற்றிக் கேட்டார், ஒரு மேடையில். நான் சொன்னேன், ’சரி குடியுங்கள், ஆனால் தலித் வைத்திருக்கும் மதுக்கடையில் குடியுங்கள். தலித் உற்பத்தி செய்வதையே குடியுங்கள்’ என. ‘அதுக்கு நாங்க எங்க போறது?’ என்றார். ’இப்போது தெரிகிறதல்லவா அ.மார்க்ஸ் ஏன் குடிக்கச்சொல்கிறார் என்று..’என்றேன்.சிரித்துவிட்டார்

ஜெ

குடி-கடிதங்கள்

நமக்குள் இருக்கும் பேய்

 

 

 

முந்தைய கட்டுரைபண்டிதர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-4