பயணம் கடிதங்கள்

222

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

 

 

அன்பின் ஜெயமோகன் சார்,

 

வணக்கம்.திடீரென உங்கள் இணையதளத்தின் இடைவெளியைப் பார்த்ததும் ,சரி சில காலம் அவருக்கும் தனிமை தேவைப்படும் தான்,அதனாலென்ன திரும்ப வந்து விடுவார் என்று தான் எண்ணிணேன்.ஆனால் சில நாட்களிலேயே அத்தனிமையை உணரத் தொடங்கினேன்.தினமும் காலையில் உங்கள் தளத்தை மேலோட்டமாக இன்று  என்னென்ன கட்டுரை  என்று மேய்ந்துவிட்டு(!) தான் என் நாளே தொடங்கும்.அதன்பிறகு பிற்பகலில் ,உணவு இடைவெளியில் மாலையில் என்று  எப்பொழுது வேண்டுமானாலும் முழுமையாக வாசித்து விடுவேன்.வெண்முரசு முதல் எந்த கட்டுரையும் நாளைக்கு என்று தள்ளி வைத்ததே இல்லை.சில ஆண்டுகள் வந்த இந்த வழக்கம் இந்த சிறு இடைவெளியில் எனக்கு பெரும் மனக்குழப்பமாக மாறியது.என்ன வாசிப்பது என்றே தெரியவில்லை.தினமும் என்னுடன் நீங்கள் நேரடியாக பேசிக்கொண்டிருப்பதாகத் தான் நான் உணருவது. நம்முடனே  நடந்து சிரித்துக்கொண்டிருந்த நெருக்கமானவர் சில நொடிகளில் காணாமல் போய்விட்ட நிலையை அடைந்தேன்.ஜெ சார் தளத்தில் பிரேக் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தேன்.இந்த பத்து நாட்களில் தான் நீங்கள் எத்தனை கருத்துகளை எங்களிடம் தினமும் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.நானிருக்கும் சூழலில் இலக்கியம்,தத்துவங்கள் ,செவ்வியல் என்பது பற்றியெல்லாம் எவரிடமும் எதையும் பகிர இயலாது.அவர்களுக்கெல்லாம் அது தேவைப்படவும் இல்லை.இப்படிப்பட்ட நிலையில் நான் இத்தனை விஷயங்களைப் பற்றியெல்லாம் தீவிரமாக வாசிப்பது உங்கள் தளத்தில் மட்டும் தான்.எனவே தான் அந்த வெறுமையை.உணர்ந்தேன்.

 

மீண்டும்.இமையத்தனிமை வாசித்ததும் என் வழமை திரும்புகிறது.இமையத்தில் உங்கள் பயணத்தை மிகவும் ரசித்து வாசிக்கிறேன்.அற்புதமான அனுபவங்கள்.

 

மிக்க நன்றி

மோனிகா மாறன்.

 

வணக்கம் ஜெமோ

 

 

அதற்குமுன் சென்றுவிடவேண்டும் என்று வேண்டிக்கொள்வதன்றி ஒன்றும் சொல்வதற்கில்லை –

எல்லோரின் வேண்டுதலும் இது தானே…..ஊழின் முன் எல்லோரும் சிறு துரும்புகள் தானே….. மனிதனாய் பிறந்த கண்ணன் உட்பட….

 

உங்கள் மனதின் அலை பாய்தல்களை அடுத்தவர் புரிந்து கொள்ள முடியாது தான். படிக்கும் சிலருக்கு இது என்ன மிகை நடிப்பு என்று கூட தோன்றும்….அனால் இந்த அலைக்கழிப்புகள் தானே உங்களை எழுத வைக்கிறது… என்ன இது உங்களிடம் பிதற்றி கொண்டிருக்கிறேன்… நிஜமாகவே என்ன எழுதணும் என்று தெரியலை…. என்னமோ உங்களுக்கு இந்த மின்னஞ்சலை அணுப்ப வேண்டும் என்று தோன்றியது, செய்கிறேன்…

 

வெண்முரசை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்…

 

அன்புடன்

சுவேதா

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம். உங்களுக்கு பல முறை கடிதம் எழுத நினைத்து , எழுதவில்லை . தயக்கம் அல்ல காரணம், யாரோ ஒரு வாசகரே, பலரோ நான் எழுத நினைப்பதை , உரையாட நினைப்பதை எழுதிவிடுவதால் நான் திருப்பதி கொண்டு விடுகிறேன். எனக்கு  உங்களை கண்டு, ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதித்தள்ளும் உங்களின் விரல்களை கண்ணில் ஒற்றி கொள்ளும் ஆசை மட்டுமே உள்ளது.

எனக்குமே மஹாபாரதத்தில் கர்ணனே  மிகவும் பிடித்தமானவன். துர்யோதனனையும் கூட கர்ணனை அரவணைத்ததாலேயே பிடிக்கும் .  கர்ணனை ஏன் பலருக்கும் பிடித்தது என்ற காரணம் வெண்முரசுவில் தெரிந்தது. வெண்முரசு விவாதக்களம்  எனக்கு வெண்முரசுவின் பல கோணங்களை அறிமுகம் செய்து , புரிய வைக்கிறது. அதன் பொருட்டு உங்களின் வாசகர்களுக்கு நான் மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.

 

உங்களின் மீது நான் பொறாமைகொள்ளும் தருணங்களும் உண்டு, உங்களின் இந்தியப்பயணங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஏக்கமும், நீங்கள் மட்டும் நினைத்த பொழுது கிளம்பிவிடுகிறீர்களே என்ற பொறாமையும் என்றும் உண்டு.

இந்தியாவையும், காந்தியையும் , நேருவையும் அம்பேத்காரையும் உங்களின் தளத்தின் மூலம்  பல கோணங்களில்  புரிந்து கொண்டேன். தினமும் ஒருமுறையாவாது  உங்களின் தளத்தில் வந்து அன்றைய கட்டுரைகளை படிக்காவிடில் ஒரு முழுமை வருவதில்லை . அரசியல், இலக்கியம், பகடி எதையும் விலகுவதில்லை. மீண்டும் உங்களின் இணையதளத்தில்  பதிவுகளை காண்பதில்  மகிழ்ச்சி . நீங்கள் சொல்லும் அனைத்து  புத்தகங்களையும் குறித்துவைத்துள்ளேன். உங்களின் அறம் நாவல் நான் விரும்பி  பரிசளிக்கும் புத்தகம் . நீங்கள் நீண்ட  ஆயுளோடு, நிறைய எழுத எல்லாம் வல்லம் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

 

நன்றி

கவிதா

 

 

அன்புள்ள ஜெ,

உங்கள் தனிமைப்பயணத்தைப் பற்றி நான் பத்துநாட்களும் கற்பனைசெய்துகொண்டே இருந்தேன். எப்படி இருக்கப்போகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டேன். என் உறவுனர் ஒருவர் உங்கள் நண்பர். நீங்கள் பசிதாகம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பிர்கள் என்று அவர் சொன்னார். பேசாமலிருக்கும்போதும் சிந்தனைசெய்துகொண்டிருப்பீர்கள். பசி தெரியாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். கட்டுரையில் அதை வாசித்தபோது வருத்தமாக இருந்தது. தனிமை நல்லதுதான். ஆனால் தனிமையைக் கலைக்காத ஒருநண்பரையாவது கூட்டிச்செல்லலாம் என நினைக்கிறேன். அவர்கள் உங்களைக் கவனித்துக்கொள்வார்கள் அல்லவா?

 

சித்ரா

 

 

Dear Jeyamohan

 

Pleasant surprise to see that your website is back. You are so open in describing your thought process and the reason to re-introspect you. Except for the grand Himalayas,  what else can offer that comfort to a lonely traveler.

 

The changes you are seeing in small picturesque Himalayan towns – for good or bad will provide a different perspective.  The rest of what you were going thru is something that you will definitely work it out. When Neelamani Kannan failed in diplomacy, we got the Bhagvad Gita.

 

All of us are waiting for the next episode of your magnum opus.

 

Please travel safe and  enjoy your travels.
Warm regards

 

 Sobana Iyengar

 

 

முந்தைய கட்டுரைநாராயணன் – சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி!
அடுத்த கட்டுரைதமிழர்களின் உணர்ச்சிகரம்